Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருவிடைமருதூர் பகுதியில் தொடர் கொள்ளை…பொதுமக்கள் அச்சம்

திருவிடைமருதூர் பகுதியில் தொடர் கொள்ளை...பொதுமக்கள் அச்சம்

திருவிடைமருதூரில் ஓய்வு பெற்ற வேளாண்மை துறை ஊழியர் வீட்டின் கதவை உடைத்து 40 பவுன் நகைகள் வெள்ளி பொருட்கள் திருட்டு

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அய்யனார் கோயில் தெருவை சேர்ந்த லட்சுமணன் வயது 69 இவர் திருவிடைமருதூர் வேளாண்மை துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில்

வாட்ச்மேனாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் இவரது மனைவி ரேணுகா. இவர்களது மகன் ஹரி இவருக்கு கடந்த ஆண்டு திருமணம் சுபலட்சுமி என்பவருடன் நடைபெற்று உள்ளது.

இந்நிலையில் கடந்த பத்தாம் தேதி ஆடிக்கு சென்ற தனது மருமகள் சுபலட்சுமியை அழைப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்னை சென்ற லட்சுமணன் குடும்பத்தினர் இன்று காலை வீடு திரும்பிய போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த சுமார் 40

பவுன் தங்க நகைகள் 3 கிலோ வெள்ளி பொருட்கள் திருடப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தனர் இது பற்றி லட்சுமணன் திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து

இன்ஸ்பெக்டர் மீனா தலைமையில் போலீசார் மற்றும் தஞ்சையில் இருந்து வரவழைக்கப்பட்ட மோப்பநாய் லியோ கொண்டு விசாரணை செய்து வருகின்றனர் கடந்த இரண்டு தினங்கள் முன்பு திறுவிடைமருதூரில் ஓய்வு பெற்ற தமிழாசிரியர் வீட்டில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் குற்றவாளிகள் பிடிப்படாத நிலையில் இன்று மீண்டும் நடைபெற்ற திருட்டு சம்பவம் பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் திருவிடைமருதூர் பகுதிகளில் அதிகரித்து வரும் தொடர் திருட்டினால் பொதுமக்கள் அச்சத்தின் உறைந்துள்ளனர்.

error: Content is protected !!