Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் மாடுபிடி வீரரின் குடும்பத்தாருக்கு 4 லட்சம்.. அமைச்சர் செந்தில்பாலாஜி வழங்கினார்..

கரூர்மாவட்டம், குளித்தலை வட்டம், தோகைமலை ஆர்.டி.மலை ஊராட்சியில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவில் தோகைமலை ஒன்றியம், வடசேரி ஊராட்சி பள்ளப்பட்டியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மகன் சிவக்குமார் (23) என்கின்ற மாடுபிடி வீரர், மாடு முட்டி பலத்த காயமடைந்த நிலையில் திருச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சைபலனின்றி உயிரிழந்தார்.

உயிரிழந்த சிவக்குமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியிருந்த தமிழக முதல்வர் ஸ்டாலின்  முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 3 லட்ச ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டிருந்தார்.  இன்று கரூர் மாவட்டம் ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்த வடசேரி ஊராட்சி பள்ளப்பட்டியைச் சேர்ந்த மாடுபிடி வீரர் சிவகுமாரின் இல்லத்திற்கு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி. கணேசன் ஆகியோர் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி முதலமைச்சர் பொது நிவாரண நிதி 3 லட்சம் மற்றும் கரூர் மாவட்ட திமுக சார்பில் 1 லட்சம் என 4 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். உடன் மாவட்ட கலெக்டர்  பிரபுசங்கர், குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் மற்றும் திமுகவினர் உடன் இருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!