Skip to content
Home » புதுகை கலெக்டர் அலுவலகத்தில் ராஜகோபால தொண்டைமானுக்கு மணிமண்டபம்……அமைச்சர் சாமிநாதன் பேட்டி

புதுகை கலெக்டர் அலுவலகத்தில் ராஜகோபால தொண்டைமானுக்கு மணிமண்டபம்……அமைச்சர் சாமிநாதன் பேட்டி

செய்தித்துறை  மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் இன்று புதுக்கோட்டை வந்தார். அங்கு அவர் அளித்த பேட்டி:

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ராஜா  ராஜகோபால தொண்டைமானுக்கு மணிமண்டபம் அமைப்பதற்காக மூன்று கோடியே 2 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

தமிழகத்தில் தற்போதைக்கு செம்மொழி மாநாடு நடத்துவதற்கான திட்டம் ஏதுமில்லை,
வெளிநாடுகளில் உள்ள தமிழ் சங்கங்கள் ஆகியோரிடம் பேசி தமிழை வளர்ப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது

பல்வேறு நாடுகளில் தமிழ் இருக்கைகள் அமைப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது
பள்ளிகளில் மாணவர்கள் தமிழ் தேர்வில் கலந்து கொள்ளாமல் இருக்கக்கூடிய சூழ்நிலையை பள்ளிக்கல்வித்துறை ஆராய்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது, தேவையான ஆலோசனைகளை தமிழ் வளர்ச்சித் துறையும் அவர்களுக்கு அளித்து வருகிறது

நேற்று சுதந்திர தின  உரையில் 55,000 அரசு துறையில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார் அந்த அறிவிப்பின் மூலமாக தமிழகத்தில் உள்ள அரசு கிளை அச்சகங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது

தமிழக அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் தமிழில் தான் கையொப்பமிட வேண்டும் என்று அரசாணை உள்ளது. அந்த அரசாணையை  மீறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு எச்சரிக்கை விடப்படுகிறது

வணிக நிறுவனங்களில் பெயர்கள் தமிழில் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும் என்று உத்தரவு உள்ளது
தமிழ் வளர்ச்சித் துறையும் தொழிலாளர் நலத்துறையும் செய்தி மக்கள்  தொடர்புத்துறையும் இணைந்து விரைவில் ஆய்வு செய்து பெயர் பலகைகள் தமிழில் இடம்  பெறாத  கடைகளை கண்டறிந்து அவர்களுக்கு எச்சரிக்கை அளித்து வரும் காலங்களில் தமிழில் பெயர் பலகை வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்

நமது தாய்மொழி தான் முக்கியம் என்று தமிழக அரசு  தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது அமைச்சர்கள் ரகுபதி,  மெய்யநாதன், கலெக்டர் மெர்சி ரம்யா ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!