Skip to content
Home » செந்தில் பாலாஜி ஜாமின் மனு… 21ம் தேதி விசாரணை

செந்தில் பாலாஜி ஜாமின் மனு… 21ம் தேதி விசாரணை

  • by Senthil

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக சுமார் மூவாயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள், 27 சாட்சிகளின் வாக்குமூலங்களுடன் கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி அமலாக்கத் துறையால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதனிடையே செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 15வது முறையாக, ஜனவரி 22ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதேபோல் செந்தில் பாலாஜி, ஜாமீன் கேட்டு 3-வது முறையாக மனுதாக்கல் செய்திருந்த நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.  அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 17வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில்  செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

senthil balaji tn assembly

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீதான விசாரணையை புதன்கிழமை ( பிப்.21) விசாரிக்க நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஒப்புதல் அளித்துள்ளார்.  வழக்கின் விசாரணை திங்கட்கிழமைக்கு பதிலாக புதன்கிழமைக்கு விசாரிக்க வேண்டுமென மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் முறையீட்டை ஏற்று நீதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!