Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் அமைச்சர் சிவசங்கர்..

தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.6.24 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார்கள். போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.6.24 கோடி மதிப்பீட்டில் இன்று (02.02.2024) பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார்கள். இந்நிகழ்வுகளில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அ.லலிதா, ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் என்.கிருஷ்ணமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாட்சியர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!