Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பெங்களூர் குண்டுவெடிப்பு…….மன்னிப்பு கேட்டார் மத்திய அமைச்சர் சோபா

பெங்களூருவில் உள்ள  ராமேஸ்வரம் கபே ஓட்டலில்  கடந்த  2 வாரத்திற்கு முன்  குண்டுகள் வெடித்தது.  இது தொடர்பாக கர்நாடகத்தை  சேர்ந்தவரும் மத்திய அமைச்சருமான சோபா  கருத்து கூறும்போது பெங்களூரு குண்டு வெடிப்பில் தமிழர்களுக்கு தொடர்பு இருக்கிறது. கிருஷ்ணகிரியில்   வெடிகுண்டு பயிற்சி எடுத்தவர் தான் குண்டு வைத்துள்ளார் என கருத்து தெரிவித்தார். இதற்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரி்வித்தார்.  தமிழ்நாடு, கர்நாடக மக்கள் இடையே  மோதலை உருவாக்கும் வகையில் மத்திய அமைச்சர் பேசி உள்ளார். அதை வாபஸ் பெற வேண்டும் என கூறி இருந்தார்.

இந்த நி்லையில் அமைச்சர் சோபா, தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டதுடன்,  அந்த கருத்தை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!