Skip to content
Home » பெண்களுக்கு ரூ.1000 உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் உதயநிதி தகவல்

பெண்களுக்கு ரூ.1000 உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் உதயநிதி தகவல்

  • by Senthil

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடக்கிறது.  25ம் தேதி  மாலை தேர்தல் பிரசாரம் நிறைவடைகிறது. எனவே அனைத்து கட்சி தலைவர்களும் ஈரோடு கிழக்கு தொகுதியை முற்றுகையிட்டு பிரசாரம் மேற்கொண்டு உள்ளனர்.  திமுக தலைவரும், தமிழக முதல்வருமான  மு.க.ஸ்டாலின் வரும் 24, 25ம் தேதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

தற்போது திமுக இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஈரோடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து வீதி வீதியாக ஓட்டு சேகரித்தார். அவர் சென்ற இடங்களில் எல்லாம் மக்கள்  அமோக ஆதரவு அளித்தனர்.  சட்டமன்ற பொதுத்தேர்தலில் அவர்  எய்ம்ஸ் என்று எழுதப்பட்ட ஒற்றை செங்கலுடன் பிரசாரம் செய்தது போல இந்த இடைத்தேர்தலிலும் அவர் ஒற்றை செங்கலுடன் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது அமைச்சர் உதயநிதி பேசியதாவது:

அமைச்சரான பின் முதல்முறையாக ஈரோடு மக்களை சந்திக்க வந்திருக்கிறேன்.  திருமகன் ஈவெரா விட்டுச் சென்ற பணிகளை தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்வதற்காக வாய்ப்பு கேட்டு வந்துள்ளேன். இன்னும் பெருமையாக சொல்ல வேண்டுமென்றால், பெரியாரின் பேரனுக்கு, கலைஞரின் பேரன் வாக்கு சேகரிக்க வந்துள்ளேன்.  இம்முறை ஈவிகேஎஸ் இளங்கோவனை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும்
திமுக ஆட்சிக்கு வந்த பின் பல்வேறு திட்டங்களை அறிவித்தது. இந்த 2 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக சென்னையில் பன்னாட்டு மருத்துவமனை பணிகள் விரைவாக செய்யப்பட்டு வருகிறது. அதற்கு ஆதாரம் இதுதான். அதேபோல் மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூலகத்தின் புகைப்படம் இதுதான்.(இரண்டு புகைப்படங்களையும் காட்டினார்)
வாக்குசாவடியில் முதல் வாக்குப்பதிவு எந்திரத்தில்  இரண்டாவதாக கை சின்னம் இருக்கும் இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கையில்  முதல் இடத்தில் இருக்கனும்.திருமகன் ஈவெராவை 9 ,000 வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்க வைத்தீர்கள், ஈவிகேஎஸ் இளங்கோவனை இன்னும் அதிக வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்க வைக்க வேண்டும் . ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்க வைத்தால் மாதம் ஒரு முறை இங்கே வந்து தங்குகின்றேன் .மேலும் 50 ஆயிரம் வாக்கு வி்த்தியாசத்தில் ஜெயிக்க வேண்டும்.அதிமுக வேட்பாளரை மக்கள் விரட்டி அடிக்கின்றதை தொலைக்காட்சியில் பார்த்து இருப்பீர்கள்

முந்தைய ஆட்சியாளர்கள் அரசின் கஜானாவை  5 லட்சம் கோடி  ரூபாய் கடனில் வைத்திருத்தார்கள்.  திமுக ஆட்சிக்கு வந்த பின்கொரனா நிவாரண தொகை , பால் விலை குறைப்பு, பெண்களுக்கு இலவச பேருந்து, மக்களை தேடி மருத்துவம், காலை சிற்றுண்டி திட்டம் இப்படி பல திட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளது .

பெண்கள் மனதில் உள்ள கோரிக்கை என்னவென்று எனக்கு தெரியும். குடும்ப தலைவிகளுக்கு உரிமை தொகை 1000 ரூபாய் இன்னும், அதிகபட்சம் 5 மாதத்திற்குள் வழங்கப்படும். அதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் எடுத்துள்ளார்.

இவ்வாறு அவர் பேசினார். அப்போது அங்கு திரண்டிருந்த மக்கள் கைதடடி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!