Skip to content
Home » பிரம்மிப்பு என்றாலே செந்தில்பாலாஜி…..அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம்…

பிரம்மிப்பு என்றாலே செந்தில்பாலாஜி…..அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம்…

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நாயனூர் பகுதியில் கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக நடைபெற்ற 1 லட்சத்து 22,000 பயனாளிகளுக்கு, 267.43 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு, முடிவுற்ற மற்றும் புதிய திட்டப் பணிகளை துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது.... கரூர் என்றாலே  எப்பொழுதும் ஸ்பெசல் தான். ஒருவேளை கரூரில் துவங்கினால் அந்த உற்சாகம் , எடுத்த வேலையில் பெறுகின்ற வெற்றி,  கரூர் மாவட்டம் தான் நம்பர் 1. தமிழகத்தில் இருக்கக்கூடிய அத்தனை மாவட்டங்களுக்கும் முன்மாதிரி மாவட்டங்களாக திகழ்கின்றது இந்த கரூர் மாவட்டம். அதற்கு ஒரு சின்ன எடுத்துக்காட்டு தான் அந்த 2 மாணவிகள் அருமையாக ஆங்கிலத்தில் பேசி வியப்பில் ஆழ்த்தினார்கள்.  அதன்பிறகு கானொலி காட்சியிலே கிட்டதட்ட 50-60 திட்டங்கள் இந்த மாவட்டத்திற்கு மட்டும் தனியாக , ஸ்பெசலாக அப்படி மற்ற மாவட்டங்களுக்கு எல்லாம் பொறாமை படக்கூடிய அளவிற்கு எடுத்துக்காட்டாக விளங்கக்கூடியது இந்த கரூர் மாவட்டம் தான்.  கரூர் என்றால் பிரம்மாண்டம், தமிழ்நாட்டின் முன்மாதிரி கரூர் மாவட்டம்.  நீங்கள் அனைவரும் உழைப்பின் மீதும் உங்கள் மீதும் வைத்திருக்கக்கூடிய அந்த நம்பிக்கையால் தான் இந்த கரூர் மாவட்டம் வளர்ச்சி பாதையை நோக்கி முன்னேறி கொண்டுயிருக்கிறது. அந்தவகையில் இப்படி எந்த நிகழ்ச்சியை செய்தாலும் அவர் எதை செய்தாலும் , முடிக்க வேண்டுமென்று எடுத்தாலும் அதை அத்தனை பேரும் பிரம்மிப்பாக பார்க்கக்கூடிய வகையில் செய்துமுடிப்பவர் தான் அமைச்சர் செந்தில்பாலாஜி அவர்கள். அதற்கு ஆதாரம் இங்கே ஆயிரக்கணக்கில் கூடியிருக்கின்ற நீங்கள் தான் அவருடைய வெற்றிக்கு , உழைப்பிற்கு ஆதாரம். அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். முத்தமிழ் கலைஞர் அவர்களும் அவருடைய அரசியல் பணியை சட்டமன்ற படியே இதே கரூர் மாவட்டத்தில் தான் துவங்கினார்.  முதல்வர் மீது நீங்கள் வைத்திருக்ககூடிய அந்த வெற்றிதான் ஈரோடு வெற்றி. சொல்வது மட்டும் இல்லை சொல்லாததையும் செய்து காட்டுவதுதான் நம்முடைய முதல்வர்  ஸ்டாலின் .   தேர்தல் நேரத்தில் குறிப்பிட்டபடி முதல்வர் மக்களுக்கு நலத்திட்டம் செய்து வருகிறது. பேருந்து கூடுகட்டும் தொழில், கொசுவலை , விவசாயம் என மூன்று தொழில்கள் நிறைந்த மாவட்டம் கரூர்  மாவட்டம்.  கடந்த ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட திட்டங்களுக்கு மீண்டும் மனுக்கள் பெறப்பட்டு அதற்கு உயிர் கொடுத்தார் முதல்வர். பெண்கள் இதுவரை 250 கோடி மக்கள் இலவச பேருந்தில் பயணம் செய்துள்ளனர். இத்திட்டம் மூலம் 2 லட்சம் குழந்தைகள்  பயன்பெற்று வருகின்றனர். தமிழக முதல்வர் கல்விக்கும், மருத்துவத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் முதல்வர் கோப்பை பேட்டியில் 12,332 நபர்கள் பங்கு பெற்றனர்.

கரூர் மாவட்டத்திற்கு மட்டும் சிறப்பு திட்டமாக 50 திட்டங்கள் செயல்படுத்தி மற்ற மாவட்டங்களை பொறைமை பட வைத்து, அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தி வருபவர் செந்தில்பாலாஜி. தொழில் நகரமான கரூர் டெக்ஸ்டைல், பேருந்து கட்டுமானம், கொசுவலை உற்பத்தியில் முன்னோடி மாவட்டமாக உள்ளது.

திமுகவிற்கு வாக்களிக்காத மக்களும் பாராட்டும் வகையில் செயல்படுவோம் என்று கூறியதை போலவே முதல்வர் செயலாற்றி வருகிறார். கலைஞரின் முதல் தொகுதியான குளித்தலை தொகுதியில் என்னை போட்டியிட அமைச்சர் செந்தில்பாலாஜி தேர்தலின்போது வற்புறுத்தினார். பெண்கள் ஸ்டாலின் பஸ் என்று கூறும் அளவுக்கு சிறப்பு திட்டமாக மாறியுள்ளது. விவசாயிகளுக்கு 1,50,000 இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டது. மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து திட்டத்திற்கு முதல் கையெழுத்து போட்டவர் முதல்வர். காலை சிற்றுண்டி மூலம் 2 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். முதல்வரின் 2 ஆண்டுகால மக்கள் நல திட்டங்களை பட்டியலிட நேரம் பத்தாது. 20 மாதங்களில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

மக்களுக்காக பணியாற்றவே நாங்கள் காத்திருக்கிறோம். தேர்தலுக்காக அல்ல. அதற்காகவே இந்த மாதிரியான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் அடிக்கடி நடத்தப்படுகின்றன. என்னுடைய துறையான மகளிர் சுய உதவி குழு மூலம் கரூர் மாவட்டத்தில் சிறப்பான திட்டங்கள் செயல்படுத்துப்பட்டுள்ளன. கரூர் மாவட்டத்தில் சுய உதவி குழுக்கள் மூலமாக பாரம்பரிய திண்பண்டங்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. அண்ணனாக, தம்பியாக, மகனாக, பேரனாக எந்த நேரமும் உங்களுக்காக பணியாற்ற சேவை புரிய காத்திருக்கிறேன் என்று பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!