Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சமுதாய வளைகாப்பு… 100 கர்ப்பிணிகளுக்கு சீதனம் வழங்கிய எம்எல்ஏ கனிமொழி

100 கர்ப்பிணிகளுக்கு சீதனம் வழங்கிய எம்எல்ஏ கனிமொழி

கோவை வடமதுரை ஸ்ரீ கிருஷ்ணா திருமண மண்டபத்தில் 100-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் பங்கேற்ற சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் கலந்து கொண்டு சீதனம் வழங்கினார்.

விழாவில் அவர் பேசியதாவது: சமுதாய வளைகாப்பு என்பது பெண்களுக்கான நிகழ்ச்சி என்று மட்டும் பார்க்கக்கூடாது. கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணின் மீது மட்டுமல்ல, அவருடைய கணவர் மற்றும் குடும்பத்தினருக்கும் கூடுதல் பொறுப்பு ஏற்படுகிறது.

பொதுவாக 7-வது மாதத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த காலகட்டத்தில் தாயின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் குடும்பத்தினர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மனைவியை மட்டும் கவனித்தால் போதாது; வயிற்றில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்தையும் கவனிக்க வேண்டும்.

கர்ப்ப காலத்தில் உடல் ஆரோக்கியத்திற்கு இணையாக மன ஆரோக்கியமும் முக்கியமானது. பெண்களுக்கு மன அழுத்தம் இல்லாத, மகிழ்ச்சியான சூழலை குடும்பத்தினர் ஏற்படுத்தித் தர வேண்டும்.

கணவர்கள் தங்களது மனைவியை நல்ல எண்ணத்தோடும், அன்போடும் கவனித்துக் கொள்ள வேண்டும். சத்தான உணவு வழங்குவது முதல் போதிய ஓய்வு, மருத்துவப் பரிசோதனை, மனநிம்மதி என அனைத்து வகையிலும் அவர்களுக்கு துணையாக இருக்க வேண்டும்.

மனநிம்மதியான கர்ப்ப காலம் ஒவ்வொரு பெண்ணுக்கும் கிடைக்க வேண்டும். ஆரோக்கியமான தாயால் தான் ஆரோக்கியமான குழந்தையை வளர்க்க முடியும். இங்கு பங்கேற்றுள்ள ஒவ்வொரு கர்ப்பிணி பெண்ணிடமும் தவெக அரசும், மக்கள் முதல்வர் விஜய் அவர்களும் எப்போதும் உடனிருப்பார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

error: Content is protected !!