உறையூரில் கீரைக்கடை வியாபாரியிடம் பணம் பறிப்பு
திருச்சி உறையூர் பாக்குப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வரதராஜன் (67 )கீரை வியாபாரம் செய்யும் இவர் நேற்று உறையூர் குறத் தெருவில் உள்ள நூலகம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்பொழுது இவரை ஒரு வாலிபர் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ 500 பணத்தை பறித்துக்கொண்டு அங்கிருந்து ஓடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து வரதராஜன் உறையூர் போலீசில் புகார் கொடுத்தார் புகாரின் பேரில் போலீசார் அந்தப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான நபர்களை பிடித்து விசாரணை செய்தனர். அப்பொழுது ஒரு வாலிபரிடம் விசாரணை செய்தபோது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினார். இதையடுத்து அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்தபோது புத்தூர் பிஷப் குலத்தெருவை சேர்ந்த ஆனந்த் (வயது 26) என்பதும், இவர் தான் வரதராஜனிடம் பணத்தை திருடினார் என தெரிய வந்தது. பிறகு உறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆனந்தனை கைது செய்துள்ளனர்.
திருச்சியில் துப்புரவு பணியாளரிடம் செல்போன் திருட்டு… வாலிபர் கைது
திருச்சி பொன்மலைப்பட்டி மலையடிவாரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில் (வயது 33) இவர் சத்திரம் பேருந்து நிலையம் அருகில் சமயபுரம் செல்லும் பஸ் நிறுத்த பகுதியில் துப்புரவு பணி மேற்கொண்டு இருந்தார். அப்பொழுது இவர் அருகில் வந்து ஒரு வாலிபர் சட்டை பாக்கெட்டில் இருந்த செல்போனை திருடிக் கொண்டு அங்கிருந்து ஓடிவிட்டார். இதையடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அந்த வாலிபரை பிடித்து கோட்டை குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக கோட்டை போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை செய்தபோது சஞ்சீவி நகர் பகுதியை சேர்ந்த கௌதம் (வயது 20) என்பது தெரிய வந்தது.
இதையடுத்து கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து கௌதமை கைது செய்து அவரிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்துள்ளனர்.
