Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழகத்தில் உரத்தட்டுப்பாடு இல்லை… வேளாண் அமைச்சர் வினோத்

தமிழகத்தில் உரத்தட்டுப்பாடு இல்லை... வேளாண் அமைச்சர் வினோத்

திருச்சி அக் 21-

திருச்சி விமான நிலையத்தில் வேளாண்துறை அமைச்சர் வினோத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விவசாயிகள் மீண்டும் போராட்டம் அறிவித்துள்ள நிலையில் இன்று மாலை விவசாய சங்கத் தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அந்தக் கூட்டத்திற்குப் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அறிவிக்கப்படும்
கடந்த ஆட்சி காலத்தில் பல இடங்களில் நெல் கிடங்குகள் இல்லாத நிலை இருந்ததது. தற்போதைய ஆட்சியில் பல்வேறு இடங்களில் நெல் கிடங்குகள் அமைப்பதற்காக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், திறந்தவெளியில் நெல் சேமிக்கப்படும் இடங்களில் மேற்கூரை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதுதவிர புதிய நெல் கொள்முதல் நிலையங்களை கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், எந்தெந்தப் பகுதிகளில் விவசாயிகளுக்கும் விவசாயப் பயிர்களுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதோ, அந்தப் பகுதிகளில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எல் நினோ காரணமாக மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், விவசாயிகள் நெல் அறுவடை செய்த பின்னர் அவற்றைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
சில இடங்களில் நெல் மூட்டைகளுக்கு பணம் வசூலிக்கப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், ஒரு சிலர் தவறு செய்கிறார்கள். இதைக் கட்டுப்படுத்த எங்களால் முடிந்த அளவுக்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். வரும் காலங்களில் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
முதலமைச்சர் மட்டுமின்றி, யாரைப் பற்றியும் அவதூறாக பேசினாலும், தவறு செய்தவர்கள் கண்டிப்பாக தண்டனையை அனுபவித்தாக வேண்டும்.
தமிழகத்தில் உரத் தட்டுப்பாடு இல்லை. அனைத்து இடங்களிலும் உரங்கள் கிடைக்கின்றன. ஒரு சில இடங்களில் உர மூட்டைகளை அனுப்புவதில் தாமதம் ஏற்படலாம். உரத் தட்டுப்பாடு இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தால், சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு உரங்களை அனுப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன

இவ்வாறு அமைச்சர் வினோத் கூறினார்.

error: Content is protected !!