Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம்தான் விளையாடுகிறது- முதல்வர் ஸ்டாலின்

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம்தான் விளையாடுகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டமாக கூறியுள்ளார்.

மும்பையில் நீட் தேர்வு முறைகேட்டில் இருவரை சிபிஐ கைது செய்தது குறித்த செய்தியை மேற்கோள் காட்டியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தரம், தரம் என்றார்கள்! நீட் தேர்வின் ஆதி முதல் அந்தம் வரை பணம், பணம்தான் விளையாடுகிறது. நீட் எனும் தேர்வுமுறையே ஒரு moral ஊழல்! அது போதாதென்று, வினாத்தாள் தொடங்கி, தேர்வறை, முடிவுகள் வெளியீடு வரை ஒவ்வொரு நிலையிலும் நிறைந்திருப்பது குளறுபடிகளும் முறைகேடுகளும்தான். நீட் – முதல் கோணல் முற்றிலும் கோணல்! RSS – BJP மாநாடுகளில் showpiece-ஆக உட்கார நேரமிருக்கும் அ.தி.மு.க.வினருக்கு இவற்றை எதிர்த்து, தங்கள் எஜமானர்களிடம் பேச நேரமோ, மானமோ இல்லை!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!