தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு அக்., 1ஆம் தேதி முதல் ரூ.5,000 வரை பராமரிப்பு தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதிகளில் ரூ.5,000, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் ரூ.4,000, ஊரக பகுதிகளில் ரூ.3,000 என தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிப்பதை தடுக்கவும், கடைகளை சுத்தம் செய்யவும் இந்த தொகை பயன்படுத்தப்பட வேண்டும். மின்கட்டணம், பழுதுபார்ப்பு பணிகளுக்கு பயன்படுத்தக்கூடாது.
டாஸ்மாக் கடைகளுக்கு மாத பராமரிப்பு தொகை அறிவிப்பு
