Skip to content
Home » அனைத்து அரசு தொடக்க பள்ளிகளிலும் காலை உணவு திட்டம்…. முதல்வர் அறிவிப்பு

அனைத்து அரசு தொடக்க பள்ளிகளிலும் காலை உணவு திட்டம்…. முதல்வர் அறிவிப்பு

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலுரை வழங்கி  பேசினார். அவர் பேசியதாவது:

தமிழ்நாடு அரசின் நலத்திட்டத்தில் 1.3 கோடி பேர் பயன் அடைந்து உள்ளனர்.  சொன்னதை செய்ததால் வளர்ச்சி அடைந்துள்ளோம்.  அரசு சார்பில் தமிழ்நாடு முழுவதும் 2.55 லட்சம் பணிகள் நடந்து வருகிறது.  சமூக வளர்ச்சி குறியீட்டில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. மக்களின் மகிழ்ச்சியே திராவிட மாடலின் நோக்கம்.  கடந்த 15 மாதங்களில் 1.5 லட்சம் விவசாயிகளுக்கு  இலவச மின்சாரம் வழங்கி உள்ளோம்.

தமிழ் மக்களின் நலன் என்று வந்து விட்டால் சொல்லாததையும் செய்வோம். சொல்லாமலும் செய்வோம்.  அளுநர் பேச்சு குறித்து மீண்டும் பேசி நான் அரசியல் ஆக்க விரும்பவில்லை.   கருணாநிதியின் மகன் என்பதை நிரூபித்து காட்டிய தினம் ஜனவரி 9.  ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை. எளிய மக்களின் பாராட்டுக்கள் என்னை ஊக்கமடைய செய்திருக்கிறது. 86% அறிவிப்புகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.

தமிழ்நாட்டின் வளர்ச்சி நம் கண்முன் நன்றாக தெரிகிறது.  ஒவ்வொரு திட்டத்தின் முன்னேற்றத்தையும் நாள்தோறும் கண்காணித்து வருகிறேன். மக்களுக்காக நொடிக்கு நொடி உழைக்கிறேன்.  தமிழ் நாட்டில் ரூ.2.23 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.  தொழில் தொடங்க சிறந்த மாநிலங்கள் பட்டியலில் 14வது இடத்தில் இருந்து தமிழ்நாடு 3வது இடத்திற்கு வந்துள்ளது.  தமிழ்நாட்டில் பணவீக்கம் குறைந்து உள்ளது. மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்து உள்ளது.  தமிழ்நாட்டில் விலைவாசி குறைந்துள்ளதாக பிரபல நாளிதழ் குறிப்பிட்டு உள்ளது.  தமிழ்நாடு தன்னிகரற்ற மாநிலமாக விரைவில் உயரும்.

அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை இந்த அரசு வழங்கி உள்ளது. 10ஆயிரம் புதிய அரசு பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.  மத்திய அரசிடம் இருந்து நிதியை கேட்டு பெற வேண்டியது உள்ளது.  நாங்கள் மதவாதத்திற்கு எதிரானவர்கள். மதத்திற்கு எதிரானவர்கள் அல்ல.  3500 கோடி ரூபாய் மதிப்புடைய கோயில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. எனவே உண்மையான மதவாதிகள் எங்களை பாராட்டுகிறார்கள். இதை பிடிக்காமல் சிலர்  அவதூறு பேசுகிறார்கள்.  காவல்துறை தங்கள் கடமைகளை சிறப்பாக செய்து வருகிறது. சட்டம் ஒழுங்கு நிலைநாட்ட அரச பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

கொடநாடு கொலை கொள்ளை சம்பவம் யார் ஆட்சியில் நடந்தது.  பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும் மானிய தொகை ரூ.10 கோடியாக  வழங்கப்படும்.  வடமாநில   தொழிலாளர்கள் பற்றிய தகவல்களை காவல்துறை சேகரித்து வருகிறது. குற்ற செயல்களில் யார் ஈடுபட்டாலும்  வட மாநிலத்தவர்கள் ஈடுபட்டாலும் நடவடிக்கை எடுக்கப்படும். 233 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிதொடர்பாக கோரிக்கை மனு அளித்துள்ளனர். ஒருவர் மட்டும் அளிக்கவில்லை.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தமிழ் மொழி கற்பிக்கப்படுவது கண்காணிக்கப்படும்.  தருத்துவ படிப்புக்காக 5பன்னாட்டு நூல்கள்  தமிழில் மொழி பெயர்த்து வெளியிடப்பட்டுள்ளது.  நமக்கு நாமே திட்டம் பேரூராட்சிகளில் மட்டுமல்ல, நகராட்சிகளிலும் செயல்படுத்தப்படும். திமுக ஆட்சியில் அதிக கடன் வாங்குவதாக எதிர்க்கட்சி தலைவர் கூறினார். அது தவறு. அதிமுக ஆட்சியில்2020-21ல்  பெறப்பட்ட நிகர கடன்  89ஆயிரம் கோடி யாக இருந்தது. நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது, கடும் நிதி நெருக்கடி இருந்தபோதிலும் அந்த கடனை 79ஆயிரம் கோடியாக குறைத்துள்ளோம்.

முதல்வரின் சாலைகள்  மேம்பாட்டு திட்டத்தை அறிமுகம் செய்கிறேன். அதன்படி முதல்கட்டமாக 2 ஆண்டுகளில் 10 ஆயிரம் கி.மீ. சாலைகள் சீரமைக்கப்படும்.

முதல்வரின் காலை உணவு திட்டம் 15.9.2022ல் மதுரையில் தொடங்கப்பட்டது. இதை அனைவரும் பாராட்டுகிறார்கள். இதனால் மாணவர்கள் வருகை அதிகரித்து உள்ளது. 23-24ல் அனைத்து அரசு பள்ளிகளிலும்(1முதல் 5ம் வகுப்புவரை) மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்படும்.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு அடுத்த ஆண்டு ஜனவரி 10,11ம் தேதிகளில் சென்னையில் நடத்தப்படும் 2030க்குள்  ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைவதே நோக்கம்.  இளைஞர்களன் நலன், பெண்களின் திறன் மேம்பாடு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். மக்களுக்காக நான் இருக்கிறேன். அதற்காக உண்மையாக உழைக்கிறேன். முடித்தே தீர்வோம் என்பதே வெற்றிக்கான இலக்கு . அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்

இவ்வாறு அவர்   பேசினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!