Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மார்பிங் புகார்: திருச்சி காவல் ஆணையர் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

 மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பியதாக பாஜக முன்னாள் நிர்வாகி கருப்பு முருகானந்தம் உள்ளிட்டோர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் திருச்சி காவல் ஆணையர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சியைச் சேர்ந்த பெண் ஒருவர் தாக்கல் செய்த மனுவில், தன்னைப் பற்றிய மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பியதாகவும், அவற்றை வெளியிடுவதாகக் கூறி பணம் பறிக்கும் நோக்கத்துடன் கருப்பு முருகானந்தத்துடன் இணைந்து செயல்பட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், மாயேஸ் ராஜா, கருப்பு முருகானந்தம், பாலமுருகன் ஆகியோர் இணைந்து மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பியதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தன்னைப் பற்றிய அவதூறான பதிவுகள் மற்றும் சித்தரிக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களால் தனது நற்பெயருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டுள்ள மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் அவதூறான பதிவுகளை உடனடியாக நீக்க உத்தரவிட வேண்டும் என்றும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மனு தொடர்பாக திருச்சி காவல் ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கைத் தொடர்ந்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!