கேரளாவின் திருச்சூர் அருகே உள்ள குருவாயூரில், வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் 1 மாத குழந்தையின் தாய் பரிதாபமாக உயிரிழந்தார். பட்டுக்குளங்கராவைச் சேர்ந்த நிதிஷின் மனைவி ஐஸ்வர்யா (31), தனது குழந்தைக்குப் பாலூட்டிக்கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பே மரணத்திற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. குடும்பத்தினர் மருத்துவமனைக்கு விரைந்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரு மாதக் குழந்தைக்குப் பாலூட்டிக்கொண்டிருந்த தாய் திடீர் மரணம்
