Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கள்ளக்காதலுக்கு இடையூறு: 6 வயது மகளை கழுத்தை நெரித்து கொன்ற தாய்

கர்நாடக மாநிலம் பெங்களூரு காடுகோடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சீகேஹள்ளி பகுதியில் வசித்து வந்தவர் பிரியங்கா. இவருக்கும் தாவணகெரே பகுதியை சேர்ந்த பிரவீன் என்பவருக்கும் கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 17 வயதில் ஒரு மகளும், 6 வயதில் வெண்ணிலா என்ற மகளும் இருந்தனர். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரியங்காவுக்கு தனது கல்லூரி கால நண்பரான மோகன் என்பவருடன் மீண்டும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் 2 பேரும் நண்பர்களாக பழகி வந்தனர். இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனால் அவர்கள் பல இடங்களுக்கு ஜோடியாக சுற்றித்திரிந்ததுடன் தனிமையில் உல்லாசமாகவும் இருந்துள்ளனர்.

இந்த கள்ளக்காதல் விவகாரம் பிரவீனுக்கு தெரியவந்துள்ளது. இதனால் அவர் மனைவி பிரியங்காவை கண்டித்துள்ளார். ஆனால் பிரியங்கா கள்ளக்காதலை கைவிடவில்லை. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கள்ளக்காதலன் மோகனுடன் சேர்ந்து வாழ முடிவு செய்த பிரியங்கா, கணவரிடம் விவாகரத்து கேட்டு தொல்லை கொடுத்துள்ளார். மேலும் கணவர் பிரவீனை பிரிந்து கள்ளக்காதலன் மோகனுடன் பிரியங்கா தனியாக வசித்து வந்துள்ளார். அவர் தன்னுடன் மகள் வெண்ணிலாவை மட்டும் அழைத்து சென்றுள்ளார்.
இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி வெண்ணிலா திடீரென இறந்துவிட்டதாக கணவர் பிரவீன் மற்றும் உறவினர்களிடம் பிரியங்கா கூறினார். அதாவது, மகள் வெண்ணிலாவுக்கு ஓட்டலில் பிரியாணி வாங்கி கொடுத்து சாப்பிட வைத்ததாகவும், அதன்பிறகு ஐஸ்கிரீம் சாப்பிட கொடுத்து ஏ.சி. காரில் தூங்க வைத்ததாகவும், வீட்டுக்கு திரும்பி வந்தபோது வெண்ணிலா இறந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

ஆனால் பிரியங்கா மீது பிரவீனுக்கு சந்தேகம் எழுந்தது. இதனால் அவர் தனது மகள் வெண்ணிலாவின் பிரேத பரிசோதனை அறிக்கையை பெற்று, வெளிநாட்டில் டாக்டராக பணியாற்றும் உறவினருக்கு அனுப்பி வைத்துள்ளார். அப்போது அந்த டாக்டர், வெண்ணிலா சாவில் ஏதோ தவறு நடந்துள்ளது. பிரியாணி சாப்பிட்டதால் அவள் இறக்கவில்லை. கழுத்தை நெரித்து கொல்லப்பட்டதாக தெரிவித்தார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பிரவீன், 3 மாதங்களுக்கு பிறகு இதுபற்றி காடுகோடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளக்காதலன் மோகனை கைது செய்தனர். இதற்கிடையே பிரியங்கா தலைமறைவாகிவிட்டார்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மகள் வெண்ணிலா கருப்பாக இருந்ததாலும், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாலும் காதலன் மோகனுடன் சேர்ந்து பிரியங்காவே அவளை கழுத்தை நெரித்து கொன்றதும், இதனை மறைக்க பிரியாணி சாப்பிட்டு மகள் உயிரிழந்ததாக நாடகமாடியதும் தெரியவந்தது.

தற்போது பிரேத பரிசோதனை அறிக்கையின் மூலம் 3 மாதங்களுக்கு பிறகு இவர்களின் ‘குட்டு’ அம்பலமாகி உள்ளது. தலைமறைவாக உள்ள பிரியங்காவை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் 6 வயது மகளை காதலனுடன் சேர்ந்து பெற்ற தாயே கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!