விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’லியோ’ படம் கடந்த அக்டோபரில் வெளியானது. இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனம் வந்ததாலும் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து இந்த ஆண்டின் சூப்பர் ஹிட் படங்கள் பட்டியலில் இடம்பெற்றது.
இதையடுத்து அடுத்ததாக ரஜினியை வைத்து ‘தலைவர் 171’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இது தொடர்பாக பேட்டி ஒன்றில் பேசியிருக்கும் லோகேஷ், ”லியோ படம் சக்சஸ் கொடுத்திருந்தாலும் படத்தின் பின் பாதி சரியாக எடுக்கப்படவில்லை என்று பரவலாக விமர்சனங்கள் எழுந்தன. படத்தின் ரிலீஸ் தேதியை முன்கூட்டியே அறிவித்துவிட்டு படத்தை ஷூட் செய்வதால் சில நேரங்களில் இதுபோல ஆகிவிடுகிறது.
ரிலீஸ் தேதி நெருங்குகிறதே என்ற பதற்றத்தில் படத்தை அவசர அவசரமாக எடுப்பதே இதற்கு முக்கிய காரணம். ஆனால், எனது படங்களில் இனிமேல் அப்படி நடக்காது. ஏனென்றால் இனிமேல் நான் ரிலீஸ் தேதியை முன்கூட்டியே அறிவிக்கப் போவதில்லை. ரஜினியின் ‘தலைவர் 171’ படத்தை அப்படித்தான் நிதானமாக இயக்கப் போகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.