சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல்கள் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக கருத்தப்பட்டது. குறிப்பாக மத்திய பிரதேசத்தில் பாஜ ஆட்சியை இ ழக்கும் என்றும் சட்டீஸ்கர் மற்றும் தெலுங்கானா என தேர்தல் நடைபெறும் 5ல் 3 மாநிலங்களை காங்கிரஸ் கைப்பற்றும் எனவும் தேர்தல் கணிப்புகளும் கூறின. இந்த முடிவுகள் இந்தியா கூட்டணியை வலு சேர்க்கும் என்றும் கருத்ப்பட்டது. ஆனால் எதிர்மாறாக 4 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் என மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வியடைந்துள்ளது. 2 மாநிலங்களில் ஆட்சியை பறிகொடுத்துள்ளது. அடுத்த 2024 மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் 17 எம்பி சீட்டுகளைக்கொண்ட தெலுங்கானாவை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. அதே சமயம் சத்தீஸ்கரில் 11 எம்பி தொகுதிகள், ராஜஸ்தானில் 25 எம்பி தொகுதிகள், மத்தியப் பிரதேசத்தில் 29 எம்பிதொகுதிகள் என மொத்தம் 69 எம்பி சீட்டுகள் விஷயத்தில் காங்கிரஸ் அலட்சியமாக இருந்துவிட்டதாக விமர்சனம் எழுந்துள்ளது. குறிப்பாக கெலாட் – பைலட் மோதல், பாகெல் – தியோ மோதல் மட்டுமல்லாது காங்கிரசின் வியூகம் சரியாக அமையவில்லை என்றும் பாராளுமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் உட்கட்சி பூசலுக்கு உடனடி தீர்வு காண வேண்டிய கட்டாயத்தில் உள்ளது காங்கிரஸ் ..