Skip to content
Home » திமுக தேர்தல் அறிக்கை குழு ஆலோசனை….

திமுக தேர்தல் அறிக்கை குழு ஆலோசனை….

நாடாளுமன்றத் தேர்தலுக்கு திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் கனிமொழி கருணாநிதி எம்.பி. தலைமையில் இன்று (23/01/2024) சென்னை அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி. ராஜா, திமுக செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன், திமுக விவசாய அணித் தலைவர் ஏ.கே.எஸ்.விஜயன், மாநிலங்களவை

உறுப்பினர்கள் கே.ஆர்.என்.ராஜேஷ் குமார், எம்.எம்.அப்துல்லா, சட்டமன்ற உறுப்பினர்கள் சி.பி.எம்.பி.எழிலரசன், எழிலன் நாகநாதன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, திமுக வர்த்தகர் அணி துணைத் தலைவர் கோவி.செழியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நாடாளுமன்றத் தேர்தலுக்கு திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!