Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

யார் உதவி செய்தாலும் வரவேற்போம்…நடிகர் விஜய்க்கு கனிமொழி பாராட்டு..

கனமழை மற்றும் வெள்ளத்தால் கடுமையாக  பாதிக்கப்பட்ட நெல்லையில் நடிகர் விஜய் இன்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளார்.  இந்த நிலையில் இன்று தூத்துக்குடியில் இருந்து விமானம்

vijayமூலம் சென்னை வந்த திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழியிடம் இது குறித்து  செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த அவர், “பாதிக்கப்பட்ட மக்களுக்கு யார் உதவி செய்தாலும் மகிழ்ச்சிதான்” என்று கனிமொழி பதிலளித்தார். மேலும் பேசிய அவர் “மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பாதிப்புகள் பெரிய அளவில் இருப்பதால் முதலமைச்சர் என்னென்ன நிவாரணங்கள் தரப்படும் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி,  திருநெல்வேலி போன்ற இடங்களில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பதற்கு அரசு  மிகப்பெரிய உதவியாக இருக்கும்” என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!