மும்பையில் இந்தியா’ கூட்டணி கட்சி தலைவர்களின் 2 நாள் ஆலோசனை கூட்டம் இன்று முடிவடைந்தது. கூட்டம் முடிந்து வெளியே வந்த மதிமுக பொது செயலாளர் வைகோவை, பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொண்டு கேள்விகள் கேட்டனர். அப்போது பத்திரிகையாளர் ஒருவர் இந்தியில் வைகோவிடம் கேள்வி எழுப்பினார். அதனை கவனித்த வைகோ ஐ டோண்ட் நோ இந்தி” என பதிலளித்தார். இதையடுத்து இன்னொரு பத்திரிகையாளர் சார், உங்களால் ஆங்கிலத்தில் பதிலளிக்க முடியும். மீட்டிங் எப்படி இருந்தது? எதிர்கால திட்டம் என்ன? என்பது பற்றி ஆங்கிலத்தில் கேட்டார். இதற்கு வைகோ, மீட்டிங் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. ஒவ்வொருவரும் தங்களின் ஆலோசனை கூறினர். மீட்டிங்கில் ஒருங்கிணைந்த கருத்து ஏற்பட்டுள்ளது. ஒருமனதாக செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றார். இந்நிலையில் தான் பத்திரிகையாளர் இந்தியில் எழுப்பிய கேள்விக்கு வைகோ இந்தி தெரியாது என பதிலளித்த வீடியோ தற்போது வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Tags:வைகோ பேட்டி