Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

முசிறி அருகே மகா மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்…

திருச்சி மாவட்டம் முசிறி அருகே காட்டுப்புத்தூரில் அருள்மிகு விநாயகர், காளிகாம்பாள். மகாமாரியம்மன், சப்த மாதர், வீரபத்திரர் ஆகிய தெய்வங்களுக்கு கோயில் திருப்பணி வேலைகள் நடைபெற்று வந்தது. திருப்பணி வேலைகள் முடிவற்ற நிலையில் இன்று மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நான்கு கால யாக பூஜைகளுடன் யாக வேள்வி, வேதபாராயணம், வாஸ்து சாந்தி, கடம் புறப்பாடு உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் கோயில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.

நிகழ்ச்சியில் அப்பகுதியைச் சேர்ந்த திரளான பத்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!