திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் பாலாஜி தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுகளாக மாவட்ட வருவாய் அலுவலரிடம் அளித்தனர். சமீபத்தில் உயிரிழந்த முதல் நிலை பெண் போலீங் உயிரிழப்பின் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது சகோதரிரம்ஜான் பேகம் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது…
எனது சகோதரி அப்துல்லா பி வி இவர் திருச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலராக வேலை செய்து வந்தார். அவருக்கு திருமணம் ஆகிவிட்டது. உடல் நிலையில் குறைபாடு ஏற்பட்டதன் காரணமாக அவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவரது கணவர் மற்றும் அவரது உறவினர்களால் அனுமதிக்கப்பட்டார் அங்கு அவர் உயிரிழந்துவட்டார். அங்கு அவர் இறந்தது குறித்தான தகவல்கள் எனது குடும்பத்திற்கு கிடைக்கப்பெறவில்லை மேலும் எனது சகோதரியின் சொத்துக்களை அடைய அவரது கணவர் முயற்சி செய்து இருப்பதாக தெரியவந்துள்ளது எனவே எனது சகோதரியின் உயிரிழப்பில் நிலவும் மர்மத்தை உடற்கூறாய்வு செய்து பூர்த்தி செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
