Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நாகை உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 2 எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்….

மேற்கு மத்திய வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில் இது அடுத்த 12 மணி நேரத்தில் வடமேற்கு வங்கக்கடலில் தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது.மேலும் இது வடக்கு-வடகிழக்கு நோக்கி நகர்ந்து, நாளை அக்டோபர் 25 ஆம் தேதி நண்பகலில் கெபுபாரா மற்றும் சிட்டகாங் இடையே ஆழமான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வங்காளதேச

 கடற்கரையை கடக்க அதிக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் 9 துறைமுகங்களில் தற்போது இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
புயல் உருவாகிய உள்ளது என்பதை குறிக்கும் வகையில்
சென்னை, கடலூர், நாகை ,எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 2 எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீன்வளத்துறை சார்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையின்படி நாகை மாவட்டம் மீனவர்கள் இரண்டாவது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!