Skip to content
Home » நாகையில் மாடு முட்டி பஸ்சின் சக்கரத்தில் விழுந்தவர் பலி… பரபரப்பு…

நாகையில் மாடு முட்டி பஸ்சின் சக்கரத்தில் விழுந்தவர் பலி… பரபரப்பு…

  • by Senthil

நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்துநிலையம்,கோட்டைவாசல் படி பப்ளிக் ஆபீஸ்ரோடு, நாகை – நாகூர் சாலைகளில் மாடுகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் சுற்றித் திரிந்து வருகின்றன. குறிப்பாக நாகை-நாகூர் பிரதான சாலை, ஆட்சியர் அலுவலகம் அருகே 50-க்கும் மேற்பட்ட மாடுகள் சாலைகளில் சுற்றித் திரிந்து வருகின்றது. மேலும் சாலையின் நடுவே

படுத்துக் கொள்வதாலும், குறுக்கே சுற்றித் திரிவதாலும் போக்குவரத்து நெரிசலும், சாலையின் நடுவே நின்று மாடுகள் சண்டையிட்டுக் கொள்ளும் போது விபத்துகளும் அடிக்கடி நடந்து வந்தது. குறிப்பாக இரவு நேரங்களில் மாடுகள் சாலையில் உறங்குவதால் மோட்டார் சைக்கிள் செல்லும் வாகன ஓட்டிகள் அதிக அளவில் விபத்துக்குள்ளாகினர். இந்த நிலையில்
நாகை மேல கோட்டைவாசல் பகுதியைச் சேர்ந்த ராஜாராமன் மகன் சபரிராஜன் (55). மேலகோட்டை வாசல் பகுதியில் பெட்ரோல் நிலையம் அருகே சாலையில்
நடந்து சென்று கொண்டிருந் தார்.அப்போது, அந்தவழியாக சென்ற மாடு அவரை முட்டியுள்ளது. இதில் தடுமாறி சாலையில் விழுந்த சபரிராஜன் அந்த வழியாக வந்த அரசுப் பேருந்து சக் கரத்தில் சிக்கி சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார். இதுகுறித்து நாகை டவுன் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.இந்த பரபரப்பு சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!