Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மீனவர்கள்-விவசாயிகளுக்கு முக்கியத்துவம் தரப்படும்…. நாகை கலெக்டர் பேட்டி….

கள்ளச்சாரய புழக்கத்தை தடுப்பதுடன், மீனவர்கள், விவசாயிகள் நலனுக்காக முக்கியத்துவம் கொடுத்து மக்கள் பணி தொடரும் ; நாகை மாவட்ட ஆட்சியராக புதிதாக பொறுப்பேற்ற ஜானி டாம் வர்கிஸ் பேட்டி.

இராமநாதபுர மாவட்ட ஆட்சியராக இருந்து வந்த ஜானி டாம் வர்கிஸ் நாகை மாவட்ட ஆட்சியராக இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். ஆட்சியர் அலுவலகம் வந்த புதிய ஆட்சியரை கூடுதல் ஆட்சியர் பிரித்விராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர். பிறகு ஆட்சியர் அறைக்கு வந்த அவர் கோப்புகளில் கையெழுத்திட்டு மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை

சந்தித்து பேசிய புதிய மாவட்ட ஆட்சியர் கூறுகையில் ; கள்ளச்சாராய புழக்கத்தை ஒழித்து நடவடிக்கை எடுப்பதுடன், மீனவர்கள் மற்றும் விவசாயிகள் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றார். மேலும் நாகை மாவட்டத்தில் கோடை கால குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுத்து, மக்கள் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!