Skip to content
Home » நாகையில் நகைக்காக மூதாட்டியை கொன்று தப்பி ஓடிய கள்ளக்காதல் ஜோடி கைது…

நாகையில் நகைக்காக மூதாட்டியை கொன்று தப்பி ஓடிய கள்ளக்காதல் ஜோடி கைது…

நாகை கீரைக்கொல்லைத்தெருவில் தனியாக வசித்து வந்த 67 வயதான மூதாட்டி சரோஜா மர்மமான முறையில் நேற்று உயிரிழந்தார். குடியிருப்புகள் அதிகம் நிறைந்த பகுதியில் நடைபெற்ற கொலை சம்பவம் என்பது நேற்று நாகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இச்சம்பவம் குறித்து புதுச்சேரியில் உள்ள அவரது இரண்டாவது மகன், தனது தாயார் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக நாகை நகர காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் நாகை நகர இன்ஸ்பெக்டர் சுப்ரியா தலைமையிலான தனிப்படை போலீசார் கொலை நடந்த வீடு மற்றும் அப்பகுதியில் இருந்த CCTV கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, அங்குள்ள மக்களிடம் தீவிர விசாரணையை நடத்தினர். விசாரணையில் மூதாட்டியின் வீட்டிற்கு ஜோடியுடன் ஒரு தம்பதி வந்ததாக அங்குள்ளவர்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தனிப்படை போலீசார் மூதாட்டியை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய நபர்களை பிடிக்க தீவிர விசாரணையில் இறங்கினர்.

அப்போது வேளாங்கண்ணியில் பதுங்கி இருந்த, தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டை உதயடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த காளிதாஸ் மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த வள்ளிமுத்து என்ற பெண்ணை தனிப்படை போலீசார் மடக்கி பிடித்தனர்.பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில்,மூதாட்டி சரோஜாவை கொலை செய்தது அவர்களது தூரத்து உறவினரான தஞ்சை உதயடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த காளிதாஸ் என்பதும். இவருக்கும் இவரது அண்ணனான வீரையன் மனைவி வள்ளிமுத்துவுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டதும் தெரிய வந்தது.

இவர்கள் இருவரும் உல்லாசமாக இருக்க எண்ணி சம்பவத்தன்று நாகையில் உள்ள மூதாட்டி சரோஜா வீட்டிற்கு சென்றுள்ளனர் அப்போது பெண்ணுடன் வந்ததை ஏற்றுக்கொள்ளாத மூதாட்டி, வீட்டை விட்டு வெளியே போக சொல்லி உள்ளார். நள்ளிரவு நேரம் என்பதால், வெளியே செல்லாமல் மூதாட்டியிடம் இவர்கள் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் வீட்டை விட்டு செல்லாமல் அங்கே இருந்ததால், மூதாட்டி கூச்சலிட ஆரம்பித்துள்ளார். அப்போது ஆத்திரமடைந்த காளிதாஸ், மூதாட்டியின் முகத்தில்

தலையணையை வைத்து அழுத்தியுள்ளார். அவருக்கு உதவியாக அவரது கள்ளக்காதலி வள்ளிமுத்து மூதாட்டியின் காலை பிடித்துக் கொள்ள சிறிது நேரத்திலேயே சரோஜா உயிர் பிரிந்துள்ளது. இதையடுத்து மூதாட்டியின் கழுத்து மற்றும் காதில் இருந்த நகைகளை திருடிக் கொண்டு ஒன்றும் தெரியாதது போல் கள்ளக்காதல் ஜோடி அங்கிருந்து அதிகாலை தப்பிச் சென்றது விசாரணையில் அம்பலமானது.

இதையடுத்து மூதாட்டியை கொலை செய்த காளிதாஸ் மற்றும் அவரது கள்ளக்காதலி வள்ளிமுத்து ஆகியரிடமிருந்து 1,லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள மூதாட்டியின் தங்க செயின், தோடு ஆகியவற்றை பறிமுதல் செய்த நாகை தனிப்படை போலீசார் இருவரையும் 18, மணி நேரத்திற்குள் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.நாகையில் நகைக்காக மூதாட்டியை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய கள்ளக்காதல் ஜோடி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!