Skip to content
Home » நாகை அருகே கருகிய குறுவை பயிரை கண்டு அதிர்ச்சியில் விவசாயி உயிரிழப்பு…

நாகை அருகே கருகிய குறுவை பயிரை கண்டு அதிர்ச்சியில் விவசாயி உயிரிழப்பு…

தமிழகத்தில் குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் மாதம் 12 ம் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனை நம்பி நாகப்பட்டினம் மாவட்டத்தில் 62 ஆயி்ரம் ஏக்கரில் நேரடி விதைப்பு மூலமாக குறுவை சாகுபடியில் விவசாயிகள் ஈடுப்பட்டிருந்தனர். ஆனால் எதிர் பார்த்த அளவிற்கு நாகை கடைமடை பகுதிக்கு ஆற்றில் தண்ணீர் வந்ததை தவிர பாசன வாய்க்காலில் வரும் அளவுக்கு  தண்ணீர் வந்து சேராதாதல் விதைத்த விதை  முளைக்காமலே போனது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். ஒரு சில விவசாயிகள் ஆயிக்கணக்கில் செலவு செய்து பல கிலோ மீட்டரிலிரிந்து இன்ஜீன் கொண்டு தண்ணீர் இறைத்து தெளித்த பயிரை காப்பாற்றி வந்தனர். இருந்த போதிலும் கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் தர மறுத்து வருவதாலும், பருவ மழை பொய்த்து போனதாலும் வளர்ந்த பயிரும் கருகி நாசமானது. இருந்த போதிலும் ஒரு சில விவசாயிகள் விடாமுயற்சியுடன் போராடி கதிர் விடும் அளவுக்கு பயிரை ஆளாக்கினர். இருந்த போதிலும் தண்ணீர் இல்லாமல்  சுத்தமாக வறண்டு போனதால் பயிர் நெல் மணிகள்  சூழ்கட்டிய  பருவத்தில் உள்ள நெற்பயிர்கள் அனைத்தும் பதராக மாறியது.

இதனால் விவசாயிகள் 80 நாள் பயிரை டிராக்டர் கொண்டு அழித்து வருகின்றனர். இந்ந நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்த திருவாய்மூர் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் 47 வயதான விவசாயி ராஜ்குமார். இவர் 50 ஏக்கருக்கு மேல் விவசாய நிலத்தில் குறுவை சாகுபடி செய்துள்ளார். இந்த நிலையில் தண்ணீரின்றி காய்ந்து போன 80 நாள் பயிரை டிராக்டரை கொண்டு அழிக்கும் பணியில் ஈடுப்பட்டிருந்தார். அப்போது தாங்காத மன அழுத்தத்தில் இருந்த அவர் கண்முன்னே வளர்த்த பயிர் அழிவதை கண்ட அதிர்ச்சியில் வயலிலே மயங்கி விழுந்துள்ளார். அவரை மீட்ட சக விவசாயிகள் திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவதனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் மாரடைப்பால் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உயிரிழந்த விவசாயி ராஜ்குமார் குறுவை சாகுபடிக்காக தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 2  லட்சத்து 5 ஆயிரமும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் 3 லட்சமும் கடன் வாங்கி விவசாயத்தில் ஈடுப்ட்டுள்ளார். இருந்த போதும் பயிரை ஆளாக்க முடியாத அவர் தனியார் அடகு கடைகளில் 62

ஆயிரத்திற்கு மனைவியின் நகைகளை அடகு வைத்தும் சாகுபடியில் ஈடுப்பட்டுள்ளார். இருந்த போதிலும் குறுவை பயிர் பொய்த்து போனதால் வாங்கிய கடனுக்காக வட்டி கட்ட முடியாமல் தவித்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பா சாகுபடியும் பொய்த்துபோனதாதல் மன உழைச்சலில் இருந்து வந்த்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வயலுக்கு தண்ணீர் இறைக்க இன்ஜீன் கொண்டு செல்லும் போது மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். உயிரிழந்த விவசாயி ராஜ்குமார் மனைவி மற்றும் உறவினர்கள் கூறும் போது எவ்வளவு இடர்பாடுகள் வந்தாலும் விவசாயத்தை விடாமல் செய்து வந்ததாகவும், குறுவைக்காக வாங்கிய கடனை சம்பா சாகுபடி செய்தெ அடைத்த விடலாம் என்று இருந்தவர் சம்பாவும் பொய்த்து போகும் சூழ்நிலையில் அதிர்ச்சியில் உயிரிழந்து விட்டார் என தெரிவித்தனர். நாகை அருகே கருகிய நெற் பயிர்களை கண்டு அதிச்சியில் மயங்கி விழுந்து விவசாயி உயிரிழந்த சம்பவம் அப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!