Skip to content
Home » நாகையில் பேரிடர் மீட்பு கட்டுமான மையம்…. பூமி பூஜையுடன் துவங்கியது….

நாகையில் பேரிடர் மீட்பு கட்டுமான மையம்…. பூமி பூஜையுடன் துவங்கியது….

  • by Senthil

நாகை அடுத்துள்ள நம்பியார் நகர் மீனவ கிராமத்தில் பேரிடர் மீட்பு மையம் கட்டுமான பணிகள் இன்று தொடங்கியது. 6 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பில் அமையவுள்ள பேரிடர் மீட்பு மையத்தின் பூமி பூஜையை தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ், நாகை சட்டமன்ற உறுப்பினர் ஷாநவாஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். 12 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் இரண்டு தளங்களை கொண்டு அமையவுள்ள கட்டிடத்தின் தரை தளத்தில், உணவுக்கூடம்,

தாழ்வாரம், அலுவலகம், மின் அறை, சமையல் கூடம், கழிவறை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் தளத்தில் தங்கும் வசதி, விழா கூடம், தாழ்வாரம், பாதுகாப்பறை உள்ளிட்ட உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளுடன் அமையவுள்ளது. மழை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே, அக்டோபர் 15-ம் தேதிக்குள் பணிகளை முடிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!