Skip to content
Home » நாகை அருகே சடலத்தை திறந்த வெளியில் எரிக்கும் அவலம்…..

நாகை அருகே சடலத்தை திறந்த வெளியில் எரிக்கும் அவலம்…..

  • by Senthil

நாகப்பட்டினம் மாவட்டம், கீழையூர் அருகே மேலப்பிடாகை-கொளப்பாடு பிரதான சாலையின் ஓரத்தில் அனைத்து சமூகத்தினரும் பயன்படுத்தும் வகையிலான பொது மயானம் உள்ளது. இதனை மடப்புரம் மற்றும் மீனம்பநல்லூர் ஆகிய இரு ஊராட்சியைச் சேர்ந்த சுமார் 400 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இங்குள்ள மயானத்தில் போதிய மயான கொட்டகை வசதி இல்லாததால் இப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். இரண்டு ஊராட்சி மக்கள் பயன்படுத்தும் மயானத்தில் ஒரே ஒரு மயான

கொட்டகை மட்டுமே இருப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு இறப்புகள் ஏற்பட்டால் உடலை திறந்த வெளியில் வைத்து எரிக்க வேண்டிய அவல நிலை உள்ளது. மேலும் தற்போதைய மழை காலம் என்பதால் திடீரென மழை பெய்தால் திறந்தவெளியில் எரிந்து கொண்டிருக்கும் சடலம் அணைந்து விடும் என்பதால் உடனடியாக மாவட்ட நிர்வாகம் இப்பகுதியில் கூடுதலாக மயான கொட்டகை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.மேலும் உடலை புதைக்கும் இடங்களில் அதிக அளவில் கருவேல மரங்கள் மண்டி இருப்பதால் அதனையும் அகற்றி சுற்றுசுவர் அமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!