Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நாகை ஸ்ரீ சின்மய முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்…

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்த வலிவலம் ஊராட்சி பெரிய கார்குடி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீ சின்மய முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழா நேற்று முதல் கால பூஜையுடன் துவங்கியது. இன்று இரண்டாம் காலை யாகபூஜை நிறைவு

பெற்று பின்னர் மகாபூர்ணாஹூதி நடைபெற்றது. பின்னர் மேள தாளங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்று, வேத விற்பனர்கள் வேத மந்திரங்கள் ஓத கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது. முன்னதாக பரிவார தெய்வமான காத்தவராயன் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திருக்குவளை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த பிரதான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!