Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நக்சல் தலைவன் விக்ரம் கவுடா சுட்டுக்கொலை..

கர்நாடக மாநிலம் உடுப்பி அருகே பாடகுண்டா என்ற இடத்தில் நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அங்கு போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் நக்சல் தலைவன் விக்ரம் கவுடா சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

கேரளாவில் நக்சலைட்டுகள் எதிர்ப்பு நடவடிக்கை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் கர்நாடக மாநிலம் உடுப்பி அருகே நக்சலைட்டுகள் முகாமிட்டுள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சமீப நாட்களாக சிருங்கேரி, நரசிம்மராஜபுரா, கார்கலா மற்றும் உடுப்பி பகுதிகளில் விக்ரம் கவுடா தலைமையிலான நக்சலைட்டுகள் நடமாடி வருவதாக கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் தலைவன் கவுடா சுட்டுக்கொல்லப்பட்டுள்ள நிலையில் தப்பி  ஓடிய நக்சலைட்டுகளை தேடும் பணியினை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!