Skip to content
Home » வேட்பு மனு தாக்கலின் போது கலெக்டருக்கு அதிர்ச்சி கொடுத்த நாமக வேட்பாளர்…

வேட்பு மனு தாக்கலின் போது கலெக்டருக்கு அதிர்ச்சி கொடுத்த நாமக வேட்பாளர்…

  • by Senthil

இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கத் தலைவர் பிரபாகரனின் பெயரைக் கூறி உறுதிமொழி எடுத்துக் கொண்ட வேட்பாளர்; உறுதிமொழி படிவத்தில் உள்ளதை படிக்காமல், ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கிய நாம் தமிழர் கட்சி வேட்பாளர்; வேட்பு மனு தாக்கலின் போது அதிர்ந்து போன ஆட்சியர்;

மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்றது. அந்த வகையில் நாகை நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் கார்த்திகா இன்று தனது கட்சியினருடன் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய வருகை தந்தார்.

அப்போது தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ஜானி டாம் வர்கீஸ் இடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதன் பின்னர் ஆட்சியர் வழங்கிய உறுதிமொழி படிவத்தை வாங்கி பார்த்த வேட்பாளர் கார்த்திகா, பிறகு அதனை படிக்கத் துவங்கினார்.

அப்போது கூறிய நாம் தமிழர் கட்சி வேட்பாளர், கார்த்திகா எனும் நான், மக்களவையில் காலியாக உள்ள இட ஒதுக்கீட்டை நிரப்புவதற்கு வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நான், சட்ட விதிகளுக்கு இணங்க நிறுவப்பட்டுள்ள இந்திய அரசியலமைப்பு அமைப்பின்பால் உண்மையாக கட்டுப்பாடும், உண்மையான நம்பிக்கையும், கட்டுப்பாடும் கொண்டிருப்பேன் என்றும் இந்திய நாட்டின் முழு முதல் ஆட்சியையும் ஒருமைப்பாட்டையும் நிலை நிறுத்துவேன் என்றும் எனக் கூறிய அவர், ஒரு கணம் நிறுத்தி… தலைவர் பிரபாகரன் மீது சூளுரைத்து உளமாற உறுதி கூறுகிறேன் என ஆட்சியருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா, இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒரு இயக்க தலைவரின் பெயரை கூறி உறுதிமொழி எடுத்துக் கொண்டது சரியா என வினா? எழுப்பினர். உறுதிமொழி படிவத்தில் ஆண்டவர் என எழுதி இருந்தது, அதனைத் தவிர்த்து 13 கோடி தமிழர்களின் இறைவன் தமிழ் தேசிய தலைவர் பிரபாகரன் என உறுதிமொழி எடுத்துக் கொண்டேன் என விளக்கம் கூறிய அவர், நாகை நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்று மக்களவைக்கு சென்று அங்கு தேசிய தலைவர் பிரபாகரன் மீது உறுதிமொழி எடுக்கும் மெயின் பிக்சர் காட்சி அங்குதான் உள்ளது என ஆவேசத்துடன் கூறினார்.

இந்திய அரசியலமைப்பு சாசனப்படி வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள், அதனை முறையாக பின்பற்றாமல் தங்களுக்கு ஏற்றவாறு அதனை மாற்றிக் கொண்டு உறுதிமொழி எடுத்துக் கொள்வதால் இவர்களுக்கான வேட்பு மனு ஏற்கப்படுமா? அல்லது நிராகரிக்கப்படுமா? என்ற அச்சம் நாகை நாடாளுமன்ற தொகுதி வாக்காளர்களிடையே எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!