Skip to content
Home » நாமக்கல்லில் களைகட்டிய சந்தை…. ரூ.1.5 கோடிக்கு ஆடுகள் அமோக விற்பனை…

நாமக்கல்லில் களைகட்டிய சந்தை…. ரூ.1.5 கோடிக்கு ஆடுகள் அமோக விற்பனை…

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை ஜன.15- ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதற்கு மறுநாள் மாட்டுப் பொங்கல் அன்று பெரும்பாலான தமிழர்கள் வீடுகளில் இறைச்சி உணவு சமைக்கப்பட்டு பரிமாறப்படுவது வழக்கம். அன்றைய தினம் ஒவ்வொரு ஊரிலும் இதற்காக ஆட்டு இறைச்சிக் கடைகள் முளைக்கும். ஆட்டு இறைச்சி மற்றும் கோழி, மீன் இறைச்சி கடைகளில் கும்பல் அலைமோதும்.

அன்றைய தினம் பொதுமக்களுக்கு விற்பனை செய்வதற்காக ஆடுகளை வாங்கும் பணியில் கடந்த ஒரு வாரமாகவே  இறைச்சிக் கடைக்காரர்கள், ஆட்டு வியாபாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆட்டுச் சந்தைகளில் கூட்டம் ஏராளமாக குவிந்து விற்பனை அமோகமாக உள்ளது.

நாமக்கல் சந்தையில் ரூ. 1½ கோடிக்கு ஆடுகள் விற்பனை | Tamil News Rs 1 crore  worth goats sold in Namakkal
நாமக்கல்லில் இன்று நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் 1.5 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதேபோல ஆரணி கேளூர் மாட்டுச்சந்தையில் 2 கோடிக்கும் அதிகமாக ஆடுகள் விற்பனை நடந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தில்  வியாழக்கிழமை கூடிய ஆட்டுச் சந்தையில் சுமார் 2 கோடி அளவிற்கு ஆடுகள் விற்பனை நடந்ததாகவும்,  ஆடுகளின் தரத்தை பொருத்து ரூ.5 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டதாகவும் வியாபாரிகள் கூறுகின்றன.  மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நேற்று நடந்த ஆட்டுச்சந்தையில்  மட்டும் 5 கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனை நடை பெற்றுள்ளது. ஆடு ஒன்று ரூ.13 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது.

இதுபோல நேற்றும், இன்றும் பல்வேறு ஊர்களிலும்  நடைபெற்ற வார சந்தைகளில் பல கோடி ரூபாய்க்கும்மேல் ஆடுகள் விற்பனை நடந்துள்ளது.  ஆடுகளுக்கு அதிக விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுவரை கிலோ  ஆயிரம் ரூபாய் வரையிலும்  விற்கப்படும் ஆட்டு இறைச்சியின் விலை மாட்டுப் பொங்கல் தினத்தில்  மேலும் அதிகரிக்கவும் வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!