Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தேசிய மருத்துவ தகுதி தேர்வு வேண்டாம்…. பிரதமர் மோடிக்கு, முதல்வர் கடிதம்

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த தேசிய அளவிலான தேர்வாகவும் முதுகலை மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வாகவும் ஒன்றிய அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள நெக்ஸ்ட் (NEXT) என்ற தேசிய மருத்துவ தகுதித் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்  பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று (13-6-2023) கடிதம் எழுதியுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:  மருத்துவ மாணவர் சேர்க்கையில், நீட் தேர்வு ஏற்கெனவே மோசமான பாதிப்பினை ஏற்படுத்தியுள்ள நிலையில், நெக்ஸ்ட் (NEXT) தேர்வை அறிமுகப்படுத்துவது கிராமப்புற மற்றும் சமூகரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கும், மாநில அரசின்கீழ் இயங்கும் மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கும் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதால், நெக்ஸ்ட் (NEXT) தேர்வு முறையினைக் கைவிட வேண்டும், தற்போதுள்ள முறையே தொடர வேண்டும். நமது மருத்துவ மாணவர்கள் எதிர்கொள்ளும் அதிக கல்விச் சுமை மற்றும் மன அழுத்தத்தைக் கருத்தில் கொண்டு இந்த தேர்வை கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!