Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நவகிரக கோயில் கலச யாத்திரை: கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பக்தர் பலி

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டம் தாப்ரா நகரில் புதிதாகக் கட்டப்பட்ட நவகிரகக் கோயில் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலச யாத்திரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

யாத்திரையில் பங்கேற்ற பெண்களுக்குப் புனித கலசங்கள் வழங்கப்பட்டபோது, அதைப் பெறுவதற்காகப் போட்டி போட்டுக்கொண்டு பலர் ஒரே நேரத்தில் முண்டியடித்தனர். இதனால் திடீரெனக் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி 70 வயது மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், ஒரு சிறுமி உட்பட 7 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!