Skip to content
Home » நவராத்திரி வீடுகளில் களைகட்டும் பிரம்மோற்சவம்… கொலு பொம்மைகள் வைத்து கொண்டாட்டம்..

நவராத்திரி வீடுகளில் களைகட்டும் பிரம்மோற்சவம்… கொலு பொம்மைகள் வைத்து கொண்டாட்டம்..

  • by Senthil

பண்டிகை என்றாலே கொண்டாட்டம்தான் நவராத்திரி பண்டிகை பெண் தெய்வங்களுக்காக வீட்டில் வசிக்கும் பெண் தெய்வங்கள் எடுக்கும் பிரம்மோற்சவம். கொலு வைத்து அம்பிகையை கொண்டாட்டமாக வணங்குவார்கள். பாடல்கள் பாடியும் நைவேத்தியங்களை படைத்தும், அலங்கார ரூபிணியாக அம்பிகையை வழிபடுவார்கள். ஒன்பது நாட்கள் கொலு வைத்து அம்பிகையை வழிபட்டால் நம்முடைய வீட்டில் அம்மன் குடியேறுவாள் என்பது நம்பிக்கை. நவராத்திரி விழாவை கொலு வைத்து கொண்டாடுவது மரபு. நவராத்திரியன்று, பெண்கள் வீடுகளில் கொலு வைத்து, விரதம் இருந்து, அம்மனை வழிபட்டால் நன்மை கிடைக்கும் என்பது ஐதீகம். முதல் 3 நாட்கள் துர்க்கையை வேண்டியும், அடுத்த 3 நாட்கள் லட்சுமி தேவியை வேண்டியும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதி தேவியை போற்றியும் வழிபாடு செய்யப்படுகிறது. பத்து நாட்களும் விதவிதமாக பிரசாதங்கள் படையலிட்டு, பாடல்கள் பாடி, அம்மனை வழிபடுவார்கள்.அந்த வகையில் பெரம்பலூர் மதனகோபால சுவாமி ஆயத்தில் சன்னதி தெருவில் பாலாஐி, வெங்கடேசன் என்பவர் வீட்டில் 45 வருடாங்களாக நவராத்திரி கொலு பொம்மைகள் வைத்து கொண்டாடி வருகின்றனர். 3000க்கும் மேற்பட்ட பொம்மைகள் வைத்து பரம்பரையாக நவராத்திரி திருவிழ◌ாவை கொண்டாடி வருகின்றனர்.

அவர்கள் கூறும்பொது …. எங்களது பாட்டி காலத்தில் இருந்து இந்த நவராத்திரி கொலுவை நாங்கள் கடைபிடித்து வருகிறோம் எங்கள் வீட்டில் நவராத்திரி திருவிழா ஆரம்பித்தாலே அருகில் இருக்கும் உறவினர்களும் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கும் கொண்டாட்டம் தான் எங்கள் வீட்டில் 20 அட்டைப்பெட்டியில் 3000 மேற்பட்ட கொலு பொம்மைகள் இருக்கிறது ஒவ்வொரு வருடமும் நாங்கள் புது விதமாக குழு வாங்கி சிறப்பு வழிபாடு

செய்வது வழக்கம் இந்த ஆண்டு கிருஷ்ணர் பிறவி முதல் அவர் செய்த அற்புதங்கள் வரை இந்த வருட கொலு பொம்மைகள் காட்சிப்படுத்தியுள்ளோம் பார்ப்பவர்கள் மிகவும் அருமையாக உள்ளதாகவும் இன்னும் பல தெய்வங்களின் படைப்புகளை குருபூமையாக வைத்தால் மிகவும் அருமையாக இருக்கும் என்று கூறி வருகின்றனர் இந்த ஆண்டு நான்காம் நாளான இன்று அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜை செய்து உறவினர்களுக்கு மக்கள் பக்கத்தில் இருக்கும் பிரசாதம் வழங்கி வழிபாடு செய்தும் இந்த வழிபாடு செய்வதில் எங்களது குடும்பத்திற்கும் மகிழ்ச்சியை தருகிறது எந்த ஒரு தீய சக்தியும் எந்த ஒரு கஷ்டங்களும் இல்லாமலும் நவராத்திரி திருவிழா 9 நாட்களும் சிறப்பு வழிபாடு செய்து பாட்டுப்பாடி மந்திரங்கள் சொல்வதும் எங்களுக்கு மனநிம்மதியை தருவதாக இருக்கிறது என்று தெரிவிக்கின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!