திருச்சியில் 47வது வார்டில் மாநகராட்சி உறுப்பினர் செந்தில்நாதன் தலைமையில் பொதுமக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களின் கோரிக்கையான . திருச்சி – புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் சாலையோர வடிகால் கட்டுவதற்காக பள்ளம் தோண்டப்பட்டு அதனால் சுப்ரமணியபுரம் முதல் ஏர்போர்ட் வரையில் தண்ணீர் ஒரு மாத காலம் வரவில்லை. மாநகராட்சி அதிகாரிகளுக்கும் – நெடுஞ்சாலை துறையினருக்கும் உரிய புரிதல் இல்லாமலேயே உள்ளதால் அடிக்கடி சாலை ஓரத்தில் பள்ளம் தோன்றுகின்றனர்.
இதனால் குடிநீர் குழாய்கள் உடைந்துவிடுவதால் 6 மாத காலமாக டேங்கர் லாரியை கொண்டு தண்ணீர் சப்ளை செய்யும் நிலை உள்ளது. இதனால் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகிறோம். அதுமட்டுமின்றி சாலைகளில் ஆங்காங்கே பள்ளமும், மேடுமாக இருப்பதால் வாகனங்கள் செல்லவும் பெரும் சிரமமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். ஆகையால் சாலையை சீரமைத்து தருமாறும் , பொதுமக்களுக்கு சீரான குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.