Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்…. 19வயது மாணவர் மாயம்…. தாய் புகார்…

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கருப்பக்கவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் செந்தில்குமார் – விஜயா (45) தம்பதியினர். இவர்களுக்கு பிரதீஸ் (19) என்ற மகன் உள்ளார்.

பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பிரதீஸ் கடந்த 2 வருடமாக நீட் தேர்வுக்காக தீவிர பயிற்சி பெற்று வந்துள்ளார். கடந்த மாதம் 7ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு எழுதிய பிரதீஸ், தேர்வில் போதிய மதிப்பெண் வராது என்ற வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மன உளைச்சலில் இருந்த பிரதீஸ் கடந்த 8ஆம் தேதி காலை வீட்டில் இருந்து வெளியே சென்று, நீண்ட நேரம் ஆகியும் திரும்ப வரவில்லை. அக்கம்பக்கம், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டில் தேடியும் மகனை காணவில்லை என்பதால் தாந்தோணிமலை காவல் நிலையத்தில் அவரது தாய் விஜயா புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் தாந்தோணிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர்.

நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் வரும் என்ற அச்சத்தில் மாணவன் பிரதீஸ் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் அவரது குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!