Skip to content
Home » நீட் தேர்வு…மாணவன் தற்கொலை… தந்தையும் தற்கொலை… அமைச்சர் உதயநிதி அஞ்சலி..

நீட் தேர்வு…மாணவன் தற்கொலை… தந்தையும் தற்கொலை… அமைச்சர் உதயநிதி அஞ்சலி..

  • by Senthil

சென்னையை அடுத்த குரோம்பேட்டை குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் செல்வம். போட்டோகிராபரான இவருடைய மகன் ஜெகதீஸ்வரன் (19). சி.பி.எஸ்.இ. பிரிவில் பிளஸ்-2 படித்த ஜெகதீஸ்வரன் 424 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். மருத்துவ படிப்பில் அதிக ஆர்வம் இருந்ததால் 2 வருடமாக நீட் தேர்வு எழுதினார். ஆனால் தொடர்ந்து 2 முறையும் நீட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. மூன்றாவது முறையாக நீட் தேர்வு எழுதி அரசு ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ். சீட் வாங்குவேன் என்ற நம்பிக்கையோடு இருந்த அவர், நீட் பயிற்சி மையத்துக்கு ஆன்லைனில் பணமும் கட்டினார்.

இதற்கிடையே, நீட் பயிற்சி மையத்தில் தன்னுடன் படித்த மாணவர்கள் சிலர் 450 மதிப்பெண்கள் பெற்றும் அரசு ஒதுக்கீடு கிடைக்காததால் என்ஜினீயரிங் படிப்பை தேர்ந்தெடுத்து சேர்ந்துள்ளனர். 2 பேர் தனியார் கல்லூரியில் அதிக பணம் கட்டி நிர்வாக ஒதுக்கீட்டு சீட் பெற்று எம்.பி.பி.எஸ். சேர்ந்துள்ளனர். இதனால் நண்பர்கள் யாரும் தன்னுடன் மீண்டும் நீட் தேர்வு எழுதவில்லை என்பதால் மனக்குழப்பத்தில் இருந்தார். விரக்தி அடைந்த ஜெகதீஸ்வரன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது அறையில் வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பிரேத பரிசோதனை முடிந்து நேற்று அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது, நீட் தேர்வால்தான் தனது மகன் தற்கொலை செய்து கொண்டான். இதேபோல் மற்ற மாணவர்களும் பாதிக்காத வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறினார். தாயார் பிரிந்து சென்ற நிலையில், செல்வம் தனது மகன் ஜெகதீஸ்வரனை மிகுந்த பாசத்துடன் வளர்த்து வந்துள்ளார். ஜெகதீஸ்வரன் இழப்பை தந்தை செல்வத்தால் தாங்கிக் கொள்ள

நீட் தேர்வில் தொடர் தோல்வி; மாணவன் தற்கொலை - சோகத்தில் தந்தை விபரீத முடிவு! - தமிழ்நாடு

முடியவில்லை. நேற்று தனது உறவினர்களுடன் வீட்டின் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென மாயமாக, அவரது உறவினர்கள் தேடியபோது, கீழே உள்ள ஒரு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கீழே உள்ள வீடு காலியாக இருந்துள்ளது. அந்த வீட்டின் சாவி செல்வத்திடம் இருந்துள்ளது. வீட்டை திறந்து சைக்கிள் மீது ஏறி, தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இந்நிலையில் உயிரிழந்த மாணவரின் தந்தையின் உடலுக்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.  தயவு செய்து மாணவர்கள் இந்த முடிவை எடுக்காதீர்கள். விரைவில் இதற்கு தீர்வு காணப்படும் என்று இவ்வாறு தெரிவித்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!