நேபாளத்தில் கடந்த ஆக.26ஆம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி 1,455 பேர் உயிரிழந்த நிலையில், 40 நாட்களாக நீடித்த மீட்புப் பணிகள் நிறைவு பெற்றது. தமிழ்நாட்டில் இருந்து சுற்றுலா சென்ற குழுவினர் உள்பட 5,285 பேர் காணாமல் போன நிலையில் 13,795 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்.
தலைநகா் காத்மாண்டுவில் பிரதமா் பலேந்திர ஷா தலைமையில் தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் தேசியக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. வெள்ளத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்த தேசியக் குழு, கடினமான சூழலில் மீட்புப் பணியில் அயராது ஈடுபட்ட பாதுகாப்புப் படையினா், அரசு ஊழியா்கள், தன்னாா்வலா்கள், செய்தியாளா்கள் மற்றும் உதவிக்கரம் நீட்டிய உலக நாடுகளுக்கு நன்றி தெரிவித்தது.
மாவட்ட பேரிடா் மேலாண்மைக் குழுக்களின் பரிந்துரைகள் மற்றும் களஆய்வு முடிவுகளின் அடிப்படையில், பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுகட்டமைப்புப் பணிகளை முழு வீச்சில் துரிதப்படுத்த இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
மேலும், பல்வேறு அமைச்சகங்கள் சமா்ப்பித்துள்ள 504 மறுவாழ்வு மற்றும் மறுகட்டமைப்புத் திட்டங்களுக்காக 55,917 கோடி நேபாள ரூபாய் நிதியை ஒப்புதல் அளிக்க நிதி அமைச்சகத்துக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. செலவு மதிப்பீடு இறுதி செய்யப்படாத திட்டங்களுக்கு அடுத்தகட்டமாக கூடுதல் நிதி கோரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
அதிகாரிகள், மாவட்ட பாதுகாப்புக் குழு மற்றும் பேரிடர் மேலாண்மை குழுக்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் தேடுதல் நடவடிக்கைகளை நிறுத்தி, மறுசீரமைப்பை விரைவுபடுத்த உத்தரவிட்டுள்ளனர். நேபாள வெள்ளப்பெருக்கு 1,455 உயிர்களை பறித்தது. 40 நாட்கள் நீடித்த தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் நிறைவடைந்த நிலையில், அரசு தற்போது மறுவாழ்வு மற்றும் புனரமைப்பு பணிகளில் கவனம் செலுத்துகிறது. பிரதமர் பலேந்திர ஷா தலைமையில் நடைபெற்ற தேசிய பேரிடர் ஆபத்து குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையத்தின் (NDRRMA) 21-வது கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
அதிகாரப்பூர்வ தகவலின்படி, இந்த பேரிடரில் 13,795 பேர் மீட்கப்பட்டு, 5,285 பேர் இன்னும் காணாமல் உள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுசீரமைப்பு மற்றும் குடியிருப்பு திட்டங்களுக்கு NPR 559.17 பில்லியன் மதிப்பிலான நிதி ஒதுக்கீடு செய்ய நிதியமைச்சரிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசு, பாதிக்கப்பட்ட 1,226 பேருக்கு தற்காலிக தங்குமிடங்களை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டத்தில் பேசிய பிரதமர் ஷா,‘மத்திய, மாகாண மற்றும் உள்ளூா் அரசுகளின் ஒருங்கிணைப்புடன் நிவாரணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டதைப் போல, மறுகட்டமைப்புப் பணிகளும் அதே கூட்டுமுயற்சியுடன் செயல்படுத்தப்படும்’ என்று கூறினார்.
எதிா்க்கட்சித் தலைவா்கள், நேபாளி காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவா் மற்றும் பாக்மதி, கண்டகி, மாதேஷ், கோஷி ஆகிய மாகாணங்களின் முதல்வா்கள் இக்கூட்டத்தில் பங்கேற்று, சீரமைப்புப் பணிகளுக்குத் தங்கள் ஆதரவை உறுதிப்படுத்தினா்.
