Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நேபாளம்… ஆற்றில் பஸ் கவிழ்ந்து 8 பேர் பலி…

நேபாளத்தின் காத்மண்டு நகரில் இருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ள பெனி-ஹில்லி மாவட்டத்தில் உள்ள பகுதியை நோக்கி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் காத்மண்டுவில் இருந்து 60 கி.மீ. தொலைவில் தடிங் மாவட்டத்தில் கஜுரி பகுதியருகே சென்றபோது பஸ் அருகே உள்ள திரிசூலி ஆற்றில் கவிழ்ந்து விபத்தானது.

இதில் பஸ்சின் ஒரு பகுதி நீரில் மூழ்கியது. இந்த விபத்தில் சிக்கி பயணிகள் 8 பேர் உயிரிழந்தனர். 19 பேர் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ பகுதிக்கு சென்ற மீட்பு குழுவினர் மற்றும் பொதுமக்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். உயிரிழந்தவர்களில் 2 பேர் பெண்கள் மற்றும் 6 பேர் ஆண்கள் ஆவர். அவர்களை அடையாளம் காணப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!