Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சையில் புதிய தாசில்தார்கள் நியமனம்

தஞ்சை மாவட்ட வருவாய்த்துறை அலகில் தாசில்தார் நிலையில் தற்காலிக பதவி உயர்வு மற்றும் பொதுமாறுதல் 3 பேருக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் செய்யப்பட்ட தாசில்தார்கள் விவரம் வருமாறு:-

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் உ பிரிவில் தலைமை உதவியாளராக இருந்த பூவந்திநாதன், தாசில்தாராக பதவி உயர்வு பெற்று கும்பகோணத்தில் உள்ள சென்னை- கன்னியாகுமரி தொழிதடச்சாலைகள் திட்ட தனி தாசில்தாராக (நில எடுப்பு) நியமிக்கப்பட்டுள்ளார்.

கும்பகோணத்தில் தேசியநெடுஞ்சாலை 45 அலகில் தனி தாசில்தாராக இருந்த அழகேசன், தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவு தனி தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். இங்கு பணியாற்றிய தாசில்தார் ராமலிங்கம் மாறுதல் செய்யப்பட்டு தஞ்சை மாவட்ட அய்வுக்குழு அலுவலகத்தில் துணை ஆய்வுக்குழு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இங்கு பணியாற்றி வந்த தமிழ்ஜெயந்தி ஓய்வு பெற்று விட்டதால் அந்த இடம் காலியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கான உத்தரவை கலெக்டர்பிறப்பித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!