குண்டூர் – திருப்பதி இடையே இயக்கப்பட்டு வரும் தினசரி விரைவு ரயில் சேவையை, திருச்சி வரை நீட்டிக்க கடந்த சில மாதங்களுக்கு முன்பு தென் மத்திய ரயில்வே நிர்வாகம், இந்திய ரயில்வே வாரியத்திற்கு பரிந்துரை செய்திருந்தது. அதனடிப்படையில் அந்த பரிந்துரைக்கு ரயில்வே வாரியம் தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி குண்டூர் – திருச்சி இடையே இனி இந்த ரயில் இயங்கும் என மத்திய ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.
