Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நடிகை சந்தியா கொலை வழக்கில் புதிய திருப்பம்

துணை நடிகை சந்தியா கொலை வழக்கில் 8 ஆண்டுகள் கடந்தும் அவரது துண்டிக்கப்பட்ட தலை மற்றும் இடது கையைத் தேடும் பணியைக் காவல் துறை அதிகாரப்பூர்வமாகக் கைவிட்டுள்ளது. 11,700 டன் குப்பைகளை அலசி ஆராய்ந்தும் தலையைக் கண்டறிய முடியாத சூழலில், வழக்கின் தேடுதல் நடவடிக்கைகளில் இத்தகைய அதிரடித் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டு சென்னையைச் சேர்ந்தத் துணை நடிகை சந்தியா, அவரது கணவரும் உதவி இயக்குநருமான பாலகிருஷ்ணனால் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார். குடும்பத் தகராறு மற்றும் சந்தேகத்தின் காரணமாகச் சந்தியாவைக் கொலை செய்த பாலகிருஷ்ணன், உடலைத் துண்டு துண்டாக வெட்டிப் பிளாஸ்டிக் பைகளில் அடைத்துப் பள்ளிக்கரணை குப்பைக் கிடங்கு உட்படப் பல்வேறு இடங்களில் வீசியெறிந்தார். இச்சம்பவம் அப்போது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொலை வழக்கில் கைதான பாலகிருஷ்ணனைக் காவல் துறை தீவிர விசாரணைக்கு உட்படுத்திய போது, உடலின் பாகங்களை வெவ்வேறு குப்பைத் தொட்டிகளில் வீசியதாகத் தெரிவித்தார். இதன் அடிப்படையில் பள்ளிக்கரணை மற்றும் பெருங்குடி குப்பைக் கிடங்குகளில் குவிக்கப்பட்டிருந்த சுமார் 11,700 டன் குப்பைகளை மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் மோப்ப நாய்களின் உதவியுடன் காவல் துறையினர் பல நாட்கள் அலசி ஆராய்ந்தனர். இந்த தீவிர தேடுதல் வேட்டையில் சந்தியாவின் கை மற்றும் கால்கள் உள்ளிட்ட பெரும்பாலான உடல் பாகங்கள் மீட்கப்பட்ட போதிலும், அவரது தலை மற்றும் இடது கை பகுதி மட்டும் கிடைக்கவில்லை. தொடர்ந்து 8 ஆண்டுகள் கழிந்த நிலையிலும் தலை கிடைக்காததால், அதற்கான தேடுதல் பணியை அதிகாரப்பூர்வமாகக் கைவிடுவதாகக் காவல் துறை அறிவித்துள்ளது.

error: Content is protected !!