Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கைலாசா எங்கே இருக்கிறது.. ஜூலை 21ல் அறிவிக்கிறார் நித்யானந்தா

சாமியார் நித்யானந்தா மீது பல வழக்குகள் உள்ளன. போலீசாரால் தேடப்பட்டு வந்த நிலையில் 2019ல் நி்த்தியானந்தா தலைமறைவானார். கைலாசா என்னும் தீவுக்கு சென்றுவிட்டதாக கூறப்பட்டது. அதனை இந்துக்களுக்கான நாடாக உருவாக்கியுள்ளதாகவும் தங்களுக்கென தனியாக அரசு, தனிக் கொடி, பாஸ்போர்ட், நாணயம் உள்ளதாகவும், அந்நாட்டின் அதிபராக நித்யானந்தா இருப்பதாக அவரது சீடர்கள் கூறினர்.
ஆனால் அந்த நாடு எங்கு இருக்கிறது என்பது இன்னும் ரகசியமாகவே உள்ளது. அதேசமயம் நித்தியானந்தா  அங்கிருந்து அவ்வபோது வீடியோ மூலம் சொற்பொழிவும் ஆற்றி, அதனை தனது பிரத்யேக யுடியூப் சேனலில் பதிவேற்றி வந்தார். இந்நிலையில் கைலாசா இருக்கும் இடத்தை வரும் ஜூலை 21ம் தேதி அறிவிக்க போவதாக நித்யானந்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் இன்று  ‘கைலாசா திறக்கப்பட்டுள்ளது. வருகிற 21ம் தேதி குருபூர்ணிமா நன்னாளில் கைலாசா இருக்கும் இடம் அறிவிக்கப்படும். உங்களை அன்போடு வரவேற்கிறோம்,’ என கூறப்பட்டுள்ளது. மேலும், ‘கைலாசா வாசியாக இப்போதே பதிவு செய்யுங்கள்’ என்று ஒரு ஆன்லைன் லிங்க்-ம் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!