பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
முதலமைச்சரின் முறையில் காவல்துறை சார்பில் காவலர்களுக்கு எந்த ஒரு அறிவிப்பும் இல்லை.
இன்று சட்டப்பேரவை நாளை முடிவதற்குள் காவல்துறையை சேர்ந்தவர்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு காத்திருக்க பட்டியலில் நிரந்தர பணி உயர்வு உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட வேண்டும்….
எந்த ஒரு அறிவிப்பும் காவல்துறைக்கு இல்லை என்பது ஏமாற்றமாக இருக்கிறது.
நான் கேட்பது இன்று மாலைக்குள் காவல்துறைக்கு ஒரு நல்ல அறிவிப்பை வழங்க வேண்டும் என்பதுதான்.
இன்று முதல்வர் பேச்சின் போது பெண்களை அவதூறாக பேசுபவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார், அதை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன்.
லட்சக்கணக்கான கொள்முதல் செய்யப்படாமல் இருக்கிறது அதை செய்ய வேண்டும்.
தண்ணீர் கடைமடை வரை செல்ல வேண்டும் தூர்வார வேண்டும் அந்த பணிகளை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறேன்….
முதலமைச்சர் ஏற்கனவே – ஆட்சியில் இருந்த ஆட்சியாளர்கள் மீது அவர்கள் செய்த ஊழல்களை குற்றச்சாட்டு சொல்லி இருக்கிறார்.
இதற்கு எனக்கு கருத்து எதுவும் இல்லை. லஞ்சம் மூலம் இல்லாத நேர்மையான ஆட்சி வரவேண்டும் என்று சொல்லியது விஜயகாந்த் அவர்கள் தான். லஞ்சம் ஊழல் இல்லாத ஆட்சி வரவேண்டும் என்பது தான் எங்கள் கருத்து…
TVK பெண் MLA இன்று பேரவைக்கு வந்த அதே நேரத்தில் நான் அதே நிறத்தில் புடவையில் வந்தது எதேர்ச்சியாக நடந்தது.
