Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஈரோடு தொகுதியில் நாளை வேட்புமனு தாக்கல் முடிகிறது

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 31-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்,  அ.தி.மு.க. ஓ.பன்னீர்செல்லம் அணி சார்பில் செந்தில்முருகன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதுதவிர பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களு46 பேர்  ஈரோடு கிழக்கு தொகுதியில் 3ம் தேதி வரை  வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.  இடையில் 2 நாள் விடுமுறை என்பதால் யாரும் வேட்புமனு தாக்கல் செய்ய வில்லை‘மீண்டும் என்று வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.எடப்பாடி பழனிசாமி அணி தரப்பில் வேட்பாளர் தென்னரசு  நாளை மனு தாக்கல் செய்யஇருக்கிறார். 8ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறும். 10ம் தேதி மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!