மும்பையில் நடந்த நிகழ்ச்சியில், மெட்டா நிறுவனம் இன்ஸ்டாகிராம் பயனர்களுக்காக புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதன்படி, இனி நீங்கள் வீட்டில் உள்ள டிவியில் இன்ஸ்டாகிராமை பயன்படுத்த முடியும் என தெரிவித்துள்ளது. எனினும் ஆப்பிள் டிவி, ஃபயர் டிவி மற்றும் கூகுள் டிவியில் மட்டுமே இதனை பயன்படுத்த முடியுமாம். இதன்மூலம் மொபைல், லேப்டாப்பை தாண்டி இனி டிவி போன்ற அகன்ற திரையிலும் இன்ஸ்டா ரீல்ஸை காணலாம்.
இனி டிவியிலும் இன்ஸ்டா ரீல்ஸ் பார்க்கலாம்!
